செய்திகள்,திரையுலகம் முத்தக்காட்சியை நீக்க மறுத்து மறு தணிக்கைக்கு போகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம்!…

முத்தக்காட்சியை நீக்க மறுத்து மறு தணிக்கைக்கு போகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம்!…

முத்தக்காட்சியை நீக்க மறுத்து மறு தணிக்கைக்கு போகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படம்!… post thumbnail image
சென்னை:-விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ள படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இந்த படத்தை திரு டைரக்டு செய்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால்–லட்சுமி மேனன் இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து நடித்த முத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படங்கள் இணையதளத்தில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில் ‘நான் சிகப்பு மனிதன்’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் முத்தக்காட்சியை சுட்டிக்காட்டி, படத்துக்கு ‘யூ–ஏ’ சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் முத்தக்காட்சியை நீக்கினால் ‘யூ’ சான்றிதழ் தருவதாக கூறினார்கள்.ஆனால் முத்தக்காட்சியை நீக்குவதற்கு விஷால் மறுத்துவிட்டார்.இதைத்தொடர்ந்து ‘நான் சிகப்பு மனிதன்’ படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி