செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!… post thumbnail image
டாக்கா:-20 ஓவர் உலககோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் இலங்கை அணி 6 புள்ளி எடுத்து ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் 6 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. குரூப் 2 பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளியுடன் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. அரையிறுதி போட்டியில் இந்தியாவும், குரூப்1 பிரிவில் 2வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. இந்த போட்டி ஏப்ரல் 4&ம் தேதி டாக்காவில் நடக்கிறது. மற்றொரு அரையிறுதி போட்டியில் குரூப்1ல் முதலிடத்தை பிடித்துள்ள இலங்கை அணி தகுதி பெற்றுவிட்டது.

இந்த அணியுடன் மோத போகும் மற்றொரு அணி எது என்பதற்கான போட்டி இன்று இரவு 7 மணிக்கு டாக்காவில் நடக்கிறது. இதில் குரூப்2ல் 4 புள்ளியுடன் இருக்கும் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி