பாடல் காட்சிக்காக 3 நாட்கள் மழையில் நனைந்த நடிகை!…

விளம்பரங்கள்

சென்னை:-நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து டைரக்டு செய்துள்ள ‘நதிகள் நனைவதில்லை’ படத்தில், பிரணவ்–மோனிகா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.

கதைப்படி பிரணவ், ‘எம்.காம்.’ பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியவர். வேலை கிடைக்காமல், குப்பை அள்ளும் வேலையில் சேருகிறார். அவர் குப்பை வண்டியில் வரும்போது, அவரை மோனிகா சந்திக்கிறார். அழுக்கோடு இருக்கும் காதலரை பெருமையாக பார்க்கிறார்.அப்போது மோனிகாவின் கண்ணில் தூசு விழுகிறது. அதை பிரணவ் தன் நாவினால் தொட்டு எடுக்க, மழை பெய்கிறது. இரண்டு பேரின் கற்பனையில், ‘சிட்டாங்கி சிட்டாங்கி…’’ என்ற பாடல் வருகிறது.

இந்த பாடல் காட்சி 3 நாட்கள் இரவு–பகலாக படமாக்கப்பட்டது. மூன்று நாட்களும் மோனிகா மழையில் நனைந்தபடி நடித்தார்.விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் செந்தில், பாலாசிங், குண்டு கல்யாணம், மதுரை முத்து, ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்ய, சவுந்தர்யன் இசையமைத்து இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: