செய்திகள்,திரையுலகம் வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…

வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்…

வேங்கை புலி (2014) திரைவிமர்சனம்… post thumbnail image
உயர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கோபி சந்த். வேலைக்குப் போகாமல் ஜாலியாக ஊரைச் சுற்றி வரும் இவர், ஒரே மகன் என்பதால் பெற்றோர் கண்டிப்பதில்லை. அதேசமயம், கடைசி வரைக்கும் வேலைக்கு போகாமல் ஜாலியாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தவும் செய்கிறார்கள்.

அதே ஊரின் மிகப்பெரிய தாதா பிரகாஷ்ராஜ். போதைப் பொருள் கடத்தல் மன்னன். இவருடைய கடத்தலுக்கு போலீஸ் உயர் அதிகாரியும், மந்திரியும் துணை நிற்கிறார்கள்.இதற்கிடையில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் நாயகி தீக்‌ஷா சேத்தை நள்ளிரவு ஒருநாள் ஒரு கும்பலிடம் இருந்து கோபி சந்த் காப்பாற்றுகிறார். பிறகு நண்பனின் பிரச்சனைக்காக ஒருவரை கோபி சந்த் தாக்க, அவரை போலீசில் மாட்டிவிடுகிறார் தீக்‌ஷா சேத். ஒருநாள் கோபி சந்தின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. அவரை தீக்‌ஷா சேத் காப்பாற்றுகிறார். அதிலிருந்து கோபி சந்த்துக்கு தீக்‌ஷா சேத் மீது காதல் ஏற்படுகிறது.
தன் காதலை தீக்‌ஷா சேத்திடம் சொல்ல முயற்சி செய்கிறார். இந்த முயற்சி கைகூடாத நிலையில், அவரது பெற்றோர், தீக்‌ஷாவிடம் சென்று ‘என் மகனை திருமணம் செய்து கொள்’ என்று கேட்கிறார்கள். தீக்‌ஷாவோ அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். இதனால் மனவேதனை அடைகிறார் கோபி சந்த்.

ஒருநாள் இரவில் நாயகிடம் சில்மிஷம் செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த கும்பலை கோபி சந்த் அடித்து நொறுக்குகிறார். அதன்பிறகு தன் காதலை தீக்‌ஷாவிடம் சொல்கிறார். உனக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு தீக்‌ஷா எனக்காக உயிரை கொடுக்க வேண்டாம், பிரகாஷ் ராஜ் உயிரை எடுக்க வேண்டும் என்று கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார்.காதல் வேகத்தில் இருந்த கோபி சந்த், பிரகாஷ் ராஜ் வீட்டிற்குள் புகுந்து அவருடைய அடியாட்களை அடித்து அவருக்கும் சவால் விடுகிறார். இதனால் வஞ்சம் தீர்க்க முடிவு செய்த பிரகாஷ் ராஜ், ஆட்களை ஏவி கோபி சந்த்தை ஊர் முழுக்க தேடுகிறார்.இறுதியில் கோபி சந்த், காதலுக்காக பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? இல்லை பிரகாஷ் ராஜிடம் பலியானாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகன் கோபி சந்த் முதற்பாதியில் துறுதுறு நாயகனாக சுறுசுறுப்புடன் நடித்திருக்கிறார். பிற்பாதியில் ஆக்‌ஷனில் மிரட்டுகிறார். கோபம், சண்டை, நடனம் என அனைத்திலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.நாயகி தீக்‌ஷா சேத் அழகாக இருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அழகு பளிச்சிடுகிறது. பிரகாஷ் ராஜை பழி வாங்க துடிக்கும் இவருடைய நடிப்பு அருமை.வில்லனாக வரும் பிரகாஷ் ராஜ், தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் மிரட்டுகிறார். குறிப்பாக நாயகனை தேடுவதற்காக இவர் செய்யும் முயற்சிகளில் நடிப்பில் தும்சம் செய்கிறார்.படத்தில் லாஜிக் இல்லாத சண்டைக்காட்சிகள் என இருந்தாலும் அதை ரசிக்கலாம். சாக்ரி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரசூல் எல்லோர் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் ரசிக்கலாம்.முற்பகுதியில் காமெடியும், பிற்பகுதியில் ஆக்‌ஷனும் கலந்து கொடுத்த இயக்குனர் ரவியை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘வேங்கை புலி’ வேட்டை……

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி