அரசியல்,செய்திகள்,திரையுலகம் நடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு!…

நடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு!…

நடிகையை பற்றி பேஸ்புக்கில் அவதூறு!… post thumbnail image
மதுரா:-பாஜவில் எம்பியாக இருக்கும் நடிகை ஹேமமாலினி, தற்போது உ.பி. மாநிலம் மதுராவில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வாரமாக மதுராவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக சமூக வலைதளமான பேஸ்புக்கில் சில மர்ம நபர்கள் அவதூறு பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. போலி முகவரிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹேமமாலினியின் உதவியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மதுரா மாவட்ட கலெக்டரிடம் மதுரா மாவட்ட பாஜ தலைவர் அஜய் குமார் புகார் அளித்துள்ளார். தவிர மாநில பாஜ சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரா சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருவதாக மதுரா மாவட்ட சிறப்பு எஸ்பி அகிலேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை நிச்சயம் என உறுதி அளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி