மோடியை மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்!… சரத்பவாரின் பேச்சால் பரபரப்பு…

விளம்பரங்கள்

ஜல்னா:-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அண்மையில் மோடிக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால் தேர்தலுக்கு பின்னர் அவர் மோடிக்கு ஆதரவளிக்க கூடும் என செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் பவார் பேசினார். அப்போது மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். பவார் பேசியதாவது:நரேந்திர மோடியின் பேச்சுக்கள் தரம் தாழ்ந்து விட்டன. அவர் உளற தொடங்கி விட்டார். அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். குஜராத் கலவரத்தின் போது அகமதாபாத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குல்பர்கா சொசைட்டி குடியிருப்பில் சிறுபான்மையினர் அடித்து கொல்லப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் எம்பி ஜபாரி உயிருடன் எரித்து கொல்லப்பட்டார்.

இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து மோடி ஆறுதல் அளிக்கவில்லை. அவர்களை பற்றி துளி கூட அவர் கவலைப்படவில்லை. அவர் மிகவும் ஆபத்தானவர். காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும் என அவர் பேசி வருகிறார். சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகத்தை அவர் அறிந்திருக்கவில்லை. காங்கிரசால்தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்பதையும் அவர் மறந்து விட்டார்.இவ்வாறு பவார் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: