மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…

விளம்பரங்கள்

பெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. 3 வாரங்களாகியும் விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மர்மம் நீடிக்கிறது.

சுமார் 14 நாடுகள் தெற்கு சீன கடல், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல், விமானம், சாட்டிலைட் மூலமாக சல்லடை போட்டு தேடியும் எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை.இறுதியில் ஆஸ்திரேலியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம். அதில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய அரசு அறிவித்தது. இதனால் சீன பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஏதோ மர்மம் உள்ளது. உண்மைகளை மலேசிய அரசு மறைக்கிறது. எந்த ஆதாரமும் இல்லாமல், விமானத்தில் சென்றவர்கள் இறந்திருக்கலாம் என்று மலேசிய அரசு எப்படி கூறியது. இதற்காக மலேசிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீன பயணிகளின் உறவினர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.இதற்கிடையில் தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 1850 கிமீ தொலைவில் விமானம் விழுந்து விட்டதாக கூறப்படும் பகுதியில் விமானத்தின் பாகங்கள் போன்ற சில மிதப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீன நாடுகள் கூறின.

அந்த நாடுகளின் சாட்டிலைட் படங்களை வைத்து கடலில் விமான பாகங்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானம் திடீரென மாயமாவதற்கு முன்பு விமானத்துக்குள் என்ன நடந்தது என்பதை கறுப்பு பெட்டி மூலம் கண்டுபிடிக்கலாம். அந்த கறுப்பு பெட்டியும் 30 நாட்கள் வரைதான் செயல்படும். பேட்டரி சார்ஜ் காலி ஆகிவிட்டால் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்காது.அதன்படி, ஏப்ரல் 5ம் தேதி வரைதான் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்கும். அதன் பிறகு அடங்கி விடும் என்று கூறுகின்றனர். எனவே, அமெரிக்கா உதவியுடன் கடலுக்கு அடியில் கறுப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் கிடந்ததாக கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தற்போது மோசமான வானிலை காணப்படுவதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் கப்பல்கள் அப்பிராந்தியத்தில் முகாமிட்டுள்ளன. கறுப்பு பெட்டி கிடைத்து விட்டால் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: