சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி திட்டம் நடக்கிறது!… இயக்குனர் பரபரப்பு பேட்டி…

விளம்பரங்கள்

சென்னை:-‘முத்துக்கு முத்தாக’, ‘கோரிபாளையம்’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுஜிபாலா. சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி வருகிறார்.புதுமுக டைரக்டர் ரவிகுமார் இயக்கி நடிக்கும் ‘உண்மை’ படத்தில் சுஜிபாலா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரவிகுமார் தன்னை அடித்ததாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவியிடம் சுஜிபாலா புகார் செய்துள்ளார். நடிகர் சங்கம் ரவிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
நடிகர் சங்கத்தில் சுஜிபாலா அளித்துள்ள புகார் குறித்து டைரக்டர் ரவி குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–சுஜிபாலாவை என்னிடம் இருந்து பிரிக்க சதி நடக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்டோம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்தது. சுஜிபாலாவுக்கு ரூ.86 லட்சத்தில் வீடு வாங்கி கொடுத்தேன். 12 ஏக்கரில் அவர் பெயருக்கு தோட்டம் வாங்கி கொடுத்தேன். விலை உயர்ந்த சொகுசு காரும் வாங்கி கொடுத்தேன்.

ஆனால் திடீரென சுஜிபாலாவுக்கு மனமாற்றம் ஏற்பட்டது. என்னை விட்டு விலக ஆரம்பித்தார். சுஜிபாலாவின் தாய் இந்திரா எனது மகள் இனிமேல் உன்னுடன் வாழமாட்டாள் என்று என்னை அசிங்கமாக திட்டினார். சுஜிபாலாவை அவரது பெற்றோர்தான் என்னிடம் இருந்து பிரித்து விட்டனர்.
சுஜிபாலாவை நான் அடித்ததாக நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். மனைவியை கண்டிக்க கணவனுக்கு உரிமை இல்லையா, என்ன நடந்தாலும் சுஜிபாலாதான் என் மனைவி. அவரை என்னால் மறக்க முடியாது. எனக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டுகிறார்கள்.சமீபத்தில் மர்ம நபர்கள் என் காரை வழிமறித்து தாக்கினர். கை கால்களில் பலத்த அடிபட்டது. சுஜிபாலாவை திருமணம் செய்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எதிர்ப்புகளை சந்திப்பேன்.இவ்வாறு ரவிகுமார் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: