செய்திகள்,திரையுலகம் வடிவேலுவின் படத்துக்கு எதிராக தணிக்கை குழுவில் புகார் தெரிவிப்பு!…

வடிவேலுவின் படத்துக்கு எதிராக தணிக்கை குழுவில் புகார் தெரிவிப்பு!…

வடிவேலுவின் படத்துக்கு எதிராக தணிக்கை குழுவில் புகார் தெரிவிப்பு!… post thumbnail image
சென்னை:-வடிவேலு இரு வேடங்களில் நடித்த ஜெகஜால புஜபல தெனாலிராமன் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி ரிலீசாகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், தெலுங்கு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.

தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தலைமையில் இருபது தெலுங்கு அமைப்புகள் நேற்று தணிக்கை அதிகாரி பக்கிரிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–வடிவேலு ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் மன்னர்களை கோமாளி போல் சித்தரித்தார். தற்போது அவர் நடித்து ரிலீசாக உள்ள ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயராகவும் தெனாலிராமனாகவும், இரு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

கிருஷ்ணதேவராயர் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்தவர். திருப்பதி கோவிலை அவர் தான் கட்டினார். கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருந்தால் தெலுங்கு பேசும் மக்கள் வருத்தப்படுவார்கள். எனவே கிருஷ்ண தேவராயர் வரலாறு தெரிந்தவர்களை வைத்து படத்தை பார்க்க வைக்க வேண்டும். சர்ச்சை காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி