செய்திகள்,திரையுலகம் லுங்கி டான்ஸ் ஆடிய அமலாபால்!…

லுங்கி டான்ஸ் ஆடிய அமலாபால்!…

லுங்கி டான்ஸ் ஆடிய அமலாபால்!… post thumbnail image
சென்னை:-‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ திரைப்படத்தில் அமலாபால் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.இதில் அமலாபால் அடிக்கடி மனநிலை மாற்றம் ஏற்படும் ஒரு பெண்ணாக நடிக்கிறார்.திடீர் சோகம், திடீர் மகிழ்ச்சி, திடீர் கோபம் ஏற்படும் அமலாபாலிற்கு ஜோடியாக நடிக்கிறார் ஆர்யா

ஆர்யாவுக்கு இதில் ஒரு மாயையான சிறப்பு சக்தி உள்ளதாகவும், இதனால் இவர்கள் இருவருக்கிடையே பிரச்சனைகள் உருவெடுப்பது போலவும் இவர்களது கதையை ஒரு பக்கம் உருவாக்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

இப்படத்தில் அமலாபால் வேட்டி சட்டை அணிந்து டான்ஸ் ஆடுவது போல் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.இதில் வேஷ்டி சட்டை அணிந்த அமலாபாலை பார்க்கும்பொழுது,சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன் ஆடிய லுங்கி டான்ஸ் தான் நியாபகத்திற்கு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி