செய்திகள்,திரையுலகம் நெட்டில் இருந்து பாடல்களை டவுன்லோடு பண்ணாதீங்க!…

நெட்டில் இருந்து பாடல்களை டவுன்லோடு பண்ணாதீங்க!…

நெட்டில் இருந்து பாடல்களை டவுன்லோடு பண்ணாதீங்க!… post thumbnail image
சென்னை:-நான் ஈ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் நடிகர் சுதீப். தற்போது கன்னடத்தில் ‘மாணிக்யா‘ என்ற படம் இயக்கி வருகிறார் ‘இப்படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்னரே இணைய தளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் சுதீப்.

அவர் கூறும்போது,‘நான் இயக்கும் பட பாடலை விரைவில் வெளியிட இருந்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே யாரோ ஆடியோவை திருடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் எனக்கு வரவேண்டிய ஆடியோ பணம் வரவில்லை.செல்போன் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். இது மோசடி செயலாகும்.

சட்டவிரோதமாக யாரும் இப்படி டவுன்லோடு செய்யாதீர்கள். இந்த செயல் திருட்டு ஆடியோவை வெளியிட்டதற்கு சமம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். ரஜினி நடிக்கும் படத்தை விரைவில் இயக்க உள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். அப்படத்துக்கு பிறகு அவர் இயக்கும் கன்னட படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் சுதீப்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி