செய்திகள்,திரையுலகம் கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…

கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…

கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.அமிசாப்பச்சன் – தனுஷ் நடிக்கும் இந்தி படமொன்றில் நடிக்க அக்‌ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர். பால்கி இப்படத்தை இயக்குகிறார்.

1970 மற்றும் 80களில் , நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக் காளை, கழுகு,அன்புக்கு நான் அடிமை உள்பட பல படங்கில் நடித்தவர் நடிகை ரதி. கமலஹாசனுடன் இவர் நடித்த ஏக் துஜே ஹேலியா இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.ரதியின் மகன் தனுஜ் விர்வானி இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்ப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார். அக்ஷரா இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காதல் விவகாரங்களில் சிக்கி எதிர்காலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்று அவர் கவலைப்படுகிறாராம். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும்படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி