செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!… post thumbnail image
கொல்கத்தா:-கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சசாங்க் மனோகர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

ஐ.பி.எல். போட்டிக்கு ஏற்கனவே களங்கம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரம் அதை மேலும் அதிகரித்துள்ளது. விளையாட்டின் நேர்மை நிலை நிறுத்தப்பட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வரையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை ‘சஸ்பெண்டு’ செய்ய வேண்டும் என்பது எனது கருத்தாகும்.வருமானம், லாபம் முக்கியமல்ல என்பதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட்டை சுத்தமாக்குவது தான் நமது தலையாய கடமையாக இருக்க வேண்டும்.ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடங்கிய போதே இதுகுறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அது நடக்கவில்லை. சூதாட்டம் குறித்து சி.பி.ஐ முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்.

ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்றை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்ற முடிவு மேலும் களங்கத்தை ஏற்படுத்துவது ஏனென்றால் மேட்ச்பிக்சிங் குற்றச்சாட்டு ஆரம்பமே அங்கிருந்து வருகிறது. அங்கு போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று 2000–ம் ஆண்டு ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டது.பாராளுமன்ற தேர்தலுக்காக அங்கு போட்டியை நடத்துவது என்ற முடிவு ஆரோக்கியமானது கிடையாது.இந்தியாவில் கிரிக்கெட் தான் புகழ்பெற்ற விளையாட்டாக உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த விளையாட்டை தான் ரசிக்கிறார்கள். அவர்களால் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் வருமானம் கிடைக்கிறது.இந்த விளையாட்டில் ரசிகர்களின் நம்பிக்கை தான் முக்கியம். கிரிக்கெட் வாரியம் அதை செய்ய தவறிவிட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி