அரசியல்,செய்திகள் 2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…

2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!…

2002 குஜராத் கலவரத்திற்கு மனம் வருந்துவதாக கூறினார் நரேந்திர மோடி!… post thumbnail image
புதுடெல்லி:-பிரிட்டன் எழுத்தாளர் ஆண்டி மெரினோ, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து 310 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2002 குஜராத் கலவரத்திற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வு இல்லை. நான் குற்றவாளி என்று எந்த கோர்ட்டும் கூறவில்லை என்று நரேந்திர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், குஜராத் கலவரத்திற்கு ஒரு மாதத்திற்கு பின்பு நடந்த பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகத் தெரிவித்தேன். ஆனால் கட்சித் தலைமை எனது ராஜினாமாவை விரும்ப வில்லை. குஜராத் மாநில மக்களுக்கும் என்னை விட்டு விலக விரும்பம் இல்லை. கட்சியின் முடிக்கு எதிராக செயல்பட எனக்கு விரும்பம் இல்லை. என்னுடைய தலைவர்கள் எதை சொன்னார்களோ அதனையே செய்தேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.2002 பிப்ரவரி 27-ம் தேதி 59 கரசேவகர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அன்று கோத்ராவில் இருந்து காந்திநகருக்கு இரவில் திரும்பினேன். ராணுவத்தை தயார் நிலையில் இருக்க செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். ஆனால் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய நேரம் என்பதால் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

எனவே எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அண்டை மாநிலங்களின் உதவியை நாடினேன். ராஜஸ்தான்(அசோக் கெலாட்), மகாராஷ்டிரா(விலாஸ்ராவ் தேஷ்முக்) மற்றும் மத்திய பிரதேச(திக் விஜய் சிங்) மாநில முதல்வர்களிடம் போலீஸ் படையை அனுப்ப கேட்டுக் கொண்டேன்.அப்போது மகாராஷ்டிரா அரசு மட்டும் பெயரளவுக்கு சிறிய போலீஸ் படையை அனுப்பியது. மற்ற 2 மாநில அரசுகளும் எனது கோரிக்கையை நிராகரித்து விட்டன என்று தெரிவித்துள்ளார். மேலும், என்னை பொறுத்தவரை வளர்ச்சிதான் தாரக மந்திரம். மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது அரசின் நோக்கம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி