காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு…

விளம்பரங்கள்

புதுடில்லி:-வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதற்கான டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா, காங்., துணைத்தலைவர் ராகுல், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.. அந்தோணி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், எங்கள் ஆட்சி காலத்தில் அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை தே.ஜ., கூட்டணியில் 5. 5 சதவீதமாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்ட்ணி ஆட்சி காலத்தில் 8.4 சதமாகவும், 2 வது ஆட்சியில் 7.3 சதமாகவும் இருந்தது. இது போன்று தொழில் துறை, வேளாண்துறை என பலவித முனற்னேற்றங்கள் சந்தித்துள்ளது. வேலை வாய்ப்பு பெருகியுள்ளது. வேளாண்துறை முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 14 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் வளர்ச்சி குறித்து பேசப்படுகிறது. ஆனால் காங்., ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை நன்மையை ஏற்படுத்தும். தற்போதைய தேர்தல் அறிக்கை மேலும் இந்தியானை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

ராகுல் பேசுகையில் ; காங்., ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளோம். காங்., கட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், மகளிர், ஏழைமக்கள், ராணுவவீரர்கள் என பல தரப்பில் கலந்து ஆலோசித்து அவர்கள் அளித்த கருத்து, எண்ணங்கள் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை எதிரொலிக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.

காங்., தலைவர் சோனியா பேசுகையில்; வரவிவருக்கும் தேர்தல் நாட்டின் ஒற்றுமையை பேணிகாக்கும் தேர்தலாக அமையும். மதச்சார்பின்மை அவசியம். நாங்கள் மக்களோடு ,மக்களாக இணைந்து பணியாற்றுவோம். ஜனநாயக கட்மைப்பை காத்திட போராடுவோம். பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரித்துள்ள ராகுலை பாராட்டுகிறேன். அவரது பங்கு பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடு படுவோம். இவ்வாறு பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: