செய்திகள்,திரையுலகம் விஜய்யின் நடனத்தை பாராட்டும் நடிகை!…

விஜய்யின் நடனத்தை பாராட்டும் நடிகை!…

விஜய்யின் நடனத்தை பாராட்டும் நடிகை!… post thumbnail image
சென்னை:-துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா கூறியிருப்பதாவது:-நடிகர் விஜய்யுடன் அவரது 57 வது படத்தில் நான் நடிக்கிறேன்.ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

அதில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலில் நான் நடனமாடினேன் அவருடன் நடனமாடும்போது எனக்கே வியப்பாக இருக்கிறது.அவரின் நடனம் எனக்கு உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. படத்தில் வேகமான துடிப்புடன் நடனம் ஆடியுள்ளார் நடிகர் விஜய் என்று தனது டிவிட்டர் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி