செய்திகள்,திரையுலகம் நேருக்கு நேர் மோதும் விஷால் – வடிவேலுவால் பரபரப்பு!…

நேருக்கு நேர் மோதும் விஷால் – வடிவேலுவால் பரபரப்பு!…

நேருக்கு நேர் மோதும் விஷால் – வடிவேலுவால் பரபரப்பு!… post thumbnail image
சென்னை:-திரு இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’.விஷால் தயாரிக்க, யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடித்திருக்கும் படம் ‘தெனாலிராமன்’. யுவராஜ் இயக்கிய இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இப்படத்தின் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. தற்போது சென்சார் முடிந்து படத்தினை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.’தெனாலிராமன்’ படத்தின் பணிகள் தற்போது இறுதிகட்டத்தினை எட்டியிருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு பொறுத்து, ‘தெனாலிராமன்’ வெளியீடு முடிவு செய்யப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ‘கோச்சடையான்‘, ஏப்ரல் 11ம் தேதி வெளியாகாத சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்று ‘தெனாலிராமன்’ வெளியாவதை உறுதிசெய்து இருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி