செய்திகள்,திரையுலகம் ‘இனம்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர்!…

‘இனம்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர்!…

‘இனம்’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-சந்தோஷ் சிவன் தயாரித்து ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் படம் ‘இனம்’. இப்படத்தில் சரிதா, கருணாஸ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் இயக்குநர் லிங்குசாமி இப்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

28ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று இரவு சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல சினிமா பிரபலங்கள் வருகை தந்திருந்தனர்.

படத்தை பார்த்த இயக்குநர் வசந்தபாலன், “நம் கண்முன் நடந்த இனப்படுகொலை, நம்முள் யாரும் திரைப்படமாக எடுக்க துணியவில்லை துணிவில்லை. சந்தோஷ்சிவன் எடுக்கத் துணிந்தது பாரட்டுக்குரியது. ஒரு உலகத் திரைப்பட விழாவில் படம் பார்க்கும் மனநிலையில் இப்படத்தைப் பார்க்க வேண்டும்” எனக் கூறி தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி