ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெயர் ‘கத்தி’!…

விளம்பரங்கள்

சென்னை:-துப்பாக்கி படத்தையடுத்து, விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் தீரன் என்ற பெயர் வைப்பதாக இருந்தனர். ஆனால், பின்னர் கதைக்கு பொருத்தமாக இருக்காது என்று மாற்று தலைப்பினை யோசித்துக்கொண்டிருந்தார் முருகதாஸ்.

அப்படி பலத்த யோசனைக்குப்பிறகு இப்போது கத்தி என்று பெயர் வைத்திருக்கிறாராம். துப்பாக்கி போன்று குறி வைத்து தாக்குபவன் என்பதற்கு அடையாளமாக துப்பாக்கி என்ற முந்தைய படத்திற்கு டைட்டில் வைத்த முருகதாஸ், இந்த படத்தில் விஜய் ஷார்ப்பானவராக நடிப்பதால், கத்தி என்ற தலைப்பை வைத்திருக்கிறாராம். இது விஜய் உள்பட அனைவருக்குமே பிடித்திருப்பதால், விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

மேலும், இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய், வாலியில் அஜீத் நடித்தது போன்று நல்லவன், கெட்டவன் என்ற இருதுருவங்களாக நடிக்கிறாராம். அதில் கெட்டவன் கோல்கட்டாவைச்சேர்ந்த ரவுடியாம். அதனால்தான் முதல்கட்ட படப்பிடிப்பை கோல்கட்டாவில் நடத்தியிருக்கிறார் முருகதாஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: