செய்திகள்,திரையுலகம் முதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை!…

முதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை!…

முதல் முறையாக பிரித்விராஜுடன் இணையும் நடிகை!… post thumbnail image
சென்னை:-தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்த அமலாபால் தற்போது முதல் முறையாக நடிகர் பிரித்விராஜூடன் கைகோர்த்துள்ளார் .இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை மலையாள இயக்குநர் சுகீத் படத்தை இயக்குகிறார்.

அமலா பால் நடித்த மைனா மற்றும் விஜய்யுடன் நடித்த தலைவா மற்றும் ஜெயம்ரவியுடன் நடித்த நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அமலா பால் சமுத்திரகனி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு இடையில் மலையாள படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

பிரித்விராஜ் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் எனினும் அவர்கள் மலையாள படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.அமலாபால் மலையாளத்தில் முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.ஆனால் மலையாளத்தில் பிரித்விராஜூடன் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி