செய்திகள்,விளையாட்டு உலக சாதனையை சமன் செய்தார் டோனி!…

உலக சாதனையை சமன் செய்தார் டோனி!…

உலக சாதனையை சமன் செய்தார் டோனி!… post thumbnail image
மிர்பூர்:-நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 10 லீக் ஆட்டத்தில், அமித் மிஷ்ரா சுழலில் மார்லன் சாமுவேல்சை அபாரமாக ஸ்டம்பிங் செய்த டோனிக்கு இது 127வது ஸ்டம்பிங் ஆகும். தனது 439வது இன்னிங்சிலேயே இந்த சாதனை மைல் கல்லை எட்டியுள்ள அவர், இலங்கையின் சங்கக்கரா படைத்த உலக சாதனையை (637 இன்னிங்சில் 127 ஸ்டம்பிங்) சமன் செய்தார்.

உலக கோப்பை டி20ல் வெஸ்ட் இண்டீசுடன் மோதியுள்ள 3 ஆட்டங்களில், இந்தியா முதல் முறையாக வென்றுள்ளது. முன்னதாக, 2009 ஜூன் 12ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், பிரிட்ஜ்டவுனில் நடந்த போட்டியில் (2010, மே 9) 14 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றிருந்தது.மூன்று ஓவரில் 3 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்த புவனேஷ்வர் (3-0-3 -0), டி20ல் சிக்கனமான பந்துவீச்சை சமன் செய்தார்.

அயர்லாந்தின் அலெக்ஸ் குசாக் கென்யாவுக்கு எதிராக (2008, ஆக. 4) 3 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 3 ரன்னுக்கு 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார் (3-1-3- 2).தவான் டி20ல் தனது முதல் டக் அவுட்டை பதிவு செய்தார்.டி20ல் அமித் மிஷ்ரா தொடர்ச்சியாக 2வது ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி