மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…

விளம்பரங்கள்

கனடா:-விமானம் ஓட்டுவதில் இருபது வருடம் அனுபவம் உள்ள கனடாவின் ஓய்வு பெற்ற பைலட் Chris Goodfellow, அவர்கள் மலேசிய விமானம் குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கின்றார்.மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய நேரம் இரவு நேரம். கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் செயல் இழந்திருக்க வேண்டும். எனவே கோலாலம்பூர் விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின்னர் வியட்நாம் விமான நிலையத்துடன் விமானி தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்க வேண்டும். இந்த பதட்டத்தில் விமானம் செல்லும் உயரத்தை விமானி கவனிக்க தவறியிருக்க வேண்டும், அதே நேரத்தில் விமானத்தின் பாதையும் திசை மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் விமானம் 43,000 அடி உயரத்தையும் தாண்டி பயணம் செய்ததாக மலேசிய விமான நிலைய தகவல்கள் கூறுகின்றன. பூமியில் இருந்து 43,000 அடிக்கும் மேல் விமானம் பறந்தால், ஆக்சிஜன் கிடைப்பது மிகவும் கடினம். எனவே விமானம் எப்போதும் 40,000 அடிக்குள்தான் பறக்கும். இதை விமானி கவனிக்க தவறியதால் விமான பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் இல்லாமல் மூர்ச்சித்து மயங்கியிருக்க வேண்டும், அல்லது ஆக்சிஜன் இன்றி இறந்திருக்க வேண்டும்.

இதனால் விமானம் பெரும் பதட்டம் உண்டாகி, பயணிகளின் உயிர்களை காப்பாற்ற உடனடியாக தரையிறக்க முயற்சித்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவரது பார்வைக்கு ஏதாவது துறைமுகம் அல்லது தீவு தெரிந்திருக்க வேண்டும். அதில் தரையிறக்க முயற்சிக்கும் வேளையில் விபத்து நடந்திருக்கலாம்.மற்றபடி விமானம் கடத்தப்பட்டது, விமானியே விமானத்தை கடத்தினார் என்பதெல்லாம் ஊடகங்களின் கற்பனைதான். என்னை பொருத்தவரையில் பயணிகளின் உயிர்களை காப்பாற்ற பைலட் கடைசி வரை போராடியிருப்பார். அவர் உண்மையில் ஹீரோதான், வில்லன் அல்ல என்று கூறியுள்ளார். இவருடைய கருத்தை பெரும்பாலானோர் ஆதரித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: