செய்திகள்,திரையுலகம் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்தின் வெற்றி ஜெயம் ரவியை அதிகம் உற்சாகப்படுத்தி இருக்கிறது.அதனால், முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.தற்போது ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருப்பவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

லட்சுமண் இயக்கும் இப்புதிய படத்துக்கு ‘ரோமியோ ஜூலியட்‘ என்று டைட்டில் வைத்துள்ளனர்.இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘எங்கேயும் காதல்’ படத்தில் ஜோடியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி