செய்திகள்,திரையுலகம் சினிஸ்டர் (2014) திரை விமர்சனம்…

சினிஸ்டர் (2014) திரை விமர்சனம்…

சினிஸ்டர் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஈதன் ஹாக் க்ரைம் நாவல் எழுதும் எழுத்தாளர். அவர் கடைசியாக எழுதிய இரண்டு நாவல்களும் சரியாக விற்பனையாகவில்லை. அடுத்த நாவலில் தன்புகழை நிலைநாட்ட நினைக்கிறார். அதற்காக ஏற்கனவே பல பேர் கொல்லப்பட்ட வீட்டை வாங்கி அங்கு கும்பத்தோடு குடியேறி அந்த வீட்டை வைத்து நாவல் எழுதுகிறார்.

அந்த வீட்டில் அவருக்கு பழைய வீடியோ கேசட்கள் கிடைக்கின்றன. அதை போட்டுப்பார்த்த ஹாக் அதிர்ச்சியாகிறார். அந்த கேசட்டில் ஏற்கனவே இறந்து போனவர்கள் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன.எல்லா வீடியோவிலும் ஒரு பொதுவான பேய் உருவம் தெரிந்ததால் அதைப்பற்றி மேலும் ஆராய தொடங்குகிறார் ஹாக். அப்போது, அவருக்கு பல இடையூறுகள், பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அந்த பேய் உருவம் அவருக்கும், மனைவி குழந்தைகளுக்கும் அச்சுறுத்தல் கொடுத்ததால், குடும்பத்தோடு தப்பி வேறு வீட்டில் குடியேறுகிறார்.அந்த வீட்டில் தான் அவருக்கு நிஜமான ஆபத்து காத்திருக்கிறது. அந்த ஆபத்தில் இருந்து ஹாக் மீண்டாரா என்பது படத்தின் முடிவு.

வழக்கமான சாதரண ஹாலிவுட் திரில்லர் போலவே இதையும் இயக்கிருக்கிறார் ஸ்காட் டெரிக்ஸன். படத்தின் முதலிலே பேயைக் காட்டாமல் போக போக எதிர்பார்ப்பைக் கூட்டி இறுதி வரை பயமுறுத்தியது மட்டும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.ஒளிப்பதிவு முழுக்க முழுக்க இருளிலே ஒரே வீட்டிலே எடுத்திருக்கிறார்கள். நிறைய திரில்லர் படம் பார்த்தவர்களுக்கு இதன் ஒளிப்பதிவு புதிதாக தெரியாது.காட்சிகளை விட இசை நிறைய இடங்களில் பயமுறுத்தியது. இறுதி காட்சியில் நம்மை பயமுறுத்த இசையின் பங்கு அதிகம்.எல்லாம் சரி கதாநாயகனின் வீட்டில் எல்லாரும் இருட்டுக்குள் இருந்து சாப்பிடுகிறார்கள். இருளில் நடமாடுகிறார்கள், பேசுகிறார்கள். வீட்டுக்குள் அந்தனை லைட் இருந்தும் ஒரு காட்சியில் கூட லைட்டை போடாமல் இருக்கிறார்கள். பேயைக்கூட இருட்டில்தான் தேடுகிறார்கள். பேய் படம் என்பதற்காக இப்படியா.அதேபோல் படத்தின் முடிவு கொஞ்சம் கூட ஏற்கும் படியாக இல்லை. படத்தை முடித்திருந்த விதம் இதை ரொம்ப சாதாரண பேய் படமாக மாற்றி விடுகிறது.
மொத்தத்தில் ‘சினிஸ்டர்’ வழக்கமான பேய் திகில் படம்…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி