செய்திகள்,திரையுலகம் அஜித்துக்கு உதவியாக தன் பயிற்சியாளரை அனுப்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான்!…

அஜித்துக்கு உதவியாக தன் பயிற்சியாளரை அனுப்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான்!…

அஜித்துக்கு உதவியாக தன் பயிற்சியாளரை அனுப்பினார் ‘சூப்பர் ஸ்டார்’ ஷாருக்கான்!… post thumbnail image
சென்னை:-வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்கி பயிற்சி அளித்து வருகிறார்.
கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 8 பேக்ஸில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி