அனிருத் இசையில் பாட்டு பாடும் விஜய்?…

விளம்பரங்கள்

சென்னை:-விஜய், சமந்தா, சதீஷ் ஆகியோர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படத்தினை ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.பல பாடல்களைப் பாடிய விஜய், சமீபமாக ‘துப்பாக்கி’ படத்தில் கூகுள் கூகுள், ‘தலைவா’ படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ‘ஜில்லா’ படத்தில் கண்டாங்கி கண்டாங்கி போன்ற பாடல்களை விஜய் பாடியிருந்தார்.

இப்பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அனிருத் விஜய் இசையில் பாடவிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: