செய்திகள்,விளையாட்டு 7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…

7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!…

7–வது ஐ.பி.எல். போட்டிக்காக ரூ. 1,100 கோடிக்கு இன்சூரன்ஸ்!… post thumbnail image
கொல்கத்தா:-7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16–ந்தேதி முதல் ஜூன் 1–ந்தேதி வரை 3 கட்டங்களாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம், இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டியை ரூ.1,100 கோடிக்கு கிரிக்கெட் வாரியம் இன்சூரன்ஸ் செய்கிறது. இது தொடர்பாக ஏ.ஒ.எல். மற்றும் அலையன்ஸ் நிறுவனங்களுடன் கிரிக்கெட் வாரியம் பேசி வருகிறது.
இந்த காப்பீடு ஐ.சி.சி. உலக கோப்பை போட்டியை விட 2 மடங்கு அதிகமானதாகும்.

2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ரூ.200 கோடிக்கும், 2011–ம் ஆண்டு நடந்த ‘பார்முலா 1’ கார் பந்தய போட்டிக்கு ரூ.500 கோடிக்கும் இன்சூர் செய்யப்பட்டது. 2011–ம் ஆண்டு நடந்த உலக கோப்பை ரூ.400 கோடி காப்பீடு செய்யப்பட்டு இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி