செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ படம் பார்த்து செளந்தர்யாவை பாராட்டிய சென்சார் போர்டு அதிகாரிகள்!…

‘கோச்சடையான்’ படம் பார்த்து செளந்தர்யாவை பாராட்டிய சென்சார் போர்டு அதிகாரிகள்!…

‘கோச்சடையான்’ படம் பார்த்து செளந்தர்யாவை பாராட்டிய சென்சார் போர்டு அதிகாரிகள்!… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்து ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து இன்னும் முடிவாகாத நிலையில் நேற்று சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது.

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்தனர். படம் சிறப்பாக வந்துள்ளதாக கருத்து தெரிவித்து கோச்சடையான் படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.கோச்சடையான் படத்திறு U சர்ட்டிபிகேட்டை சென்சார் அதிகாரிகள் நேற்று இயக்குனர் செளந்தர்யாவிடம் அளித்தனர்.

சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டபடியால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.இந்தியாவின் முதல் 3-D photorealistic motion capture திரைப்படமாக தயாராகியுள்ள கோச்சடையான் படத்தை பார்க்க ரசிகர்கள்மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி