செய்திகள்,திரையுலகம் கமல் பட ஷூட்டிங் ரத்து!…

கமல் பட ஷூட்டிங் ரத்து!…

கமல் பட ஷூட்டிங் ரத்து!… post thumbnail image
பெங்களூர்:-கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெங்களூரில் கடந்த 1 வாரமாக நடந்து வந்தது. இந்நிலையில் கர்நாடக திரைப்பட தொழிலாளர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அங்கு ஏற்கனவே இருக்கும் கர்நாடக சலன சித்ர தொழிலாளர் சங்கத்துக்கு போட்டியாக புதிய சங்கம் உருவாக்கப்பட்டது.

இதையடுத்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சினிமா தொழிலாளர்கள் அங்கு ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.புதிய சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினரிடம் சலன சித்ர அமைப்பினர் முறையிட்டனர். அவர்களிடையே பேசிய ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டதுடன் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றனர்.

இப்பிரச்னையால் பெங்களூரில் கடந்த செவ்வாய்கிழமை வரை நடந்து வந்த கமல்ஹாசன் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பட குழுவினர் சென்னை திரும்பினார்கள். இது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறும்போது, 90 நாட்களுக்கான ஷூட்டிங்கை பெங்களூரில் நடத்த திட்டமிடப்பட்டது. தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஷூட்டிங் நடத்த முடியவில்லை. அங்கு பிரச்னை முடிவுக்கு வரும்வரை சென்னையிலே உத்தமவில்லன் பட ஷூட்டிங் நடத்துவேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி