செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!…

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு ஏமாற்றம் தந்த புதிய iOS 7.1 சாப்ட்வேர்!… post thumbnail image
அமெரிக்கா:-கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோனின் iOS 7.1, உபயோகிப்பாளர்களை பெரும் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இந்த சாப்ட்வேர் காரணமாக தங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியின் சார்ஜை குறைத்துவிடுவதாகவும், தாங்கள் சேமித்து வைத்திருந்த காண்டாக்ட் எண்கள் மற்றும் பெயர்களை இந்த சாப்ட்வேர் அழித்துவிடுவதாகவும், புளூடூத் கனெக்ஷனை தடுப்பதாகவும், கீ போர்டி செயல்பாட்டை தடுப்பதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதால் இந்த சாப்ட்வேர் தற்போது சிக்கலில் உள்ளது.டுவிட்டரில் இதுகுறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. @Robbie Kimpton என்பவர் இந்த சாப்ட்வேர் தன்னுடைய ஐபோனில் இருப்பதால் தன்னுடைய ஐபோனின் பேட்டரி 30 நிமிடங்களில் 92% காலியாகிவிடுவதாக தெரிவித்துள்ளார்.

Mattyboy என்பவர் டுவிட்டரில் தெரிவித்த கருத்து. காலை 8.30 மணிக்கு iOS 7.1 அப்டேட் செய்தேன். அப்போது எனது ஐபோனில் 100% பேட்டரி சார்ஜ் இருந்தது. ஆனால் 10.40 எனது ஐபோனின் சார்ஜ் 85% மறைந்துவிட்டது. என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி