செய்திகள்,திரையுலகம் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!… post thumbnail image
சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த்.

சூரிக்கு இம்மாதம் 26 ஆம் தேதியிலிருந்தே படபிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் சண்டை காட்சி ஒன்றுக்காக 500 கார்களில் 30 கார்களை உடைத்து படம்பிடித்துள்ளனர்.மொத்தம் மூன்று சண்டை காட்சிகள் இப்படத்தில் உள்ளன கடைசி கிளைமேக்ஸ் சண்டை காட்சி ஹைதராபாத்தில் எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

தற்போது இப்படத்தில் சூர்யா ரெட்டை வேடத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் என்ற வெளியாகியுள்ளது.ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கும் இப்படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் சூர்யா, சமந்தா நடிக்க இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி