தேர்தல் ஆணைய விழிப்புணர்வு படத்தில் கமல்ஹாசன்!…

விளம்பரங்கள்

சென்னை:-ஓட்டுக்கு பணம் என்பதை பாராளுமன்ற தேர்தலில் முறியடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, குறும்பட சி.டி. ஒன்றையும் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது.

இதில் நடிகர் கமல்ஹாசன், தோன்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார். இதற்கான வீடியோ சி.டி. நேற்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதனை வெளியிட்டார். 25 வினாடிகள் ஓடக்கூடிய இந்த சி.டி.யில், நடிகர் கமலஹாசன் பேசியிருப்பதாவது:–நாட்டுக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளில் மிகவும் முக்கியமானது வாக்களிப்பதாகும். வேட்பாளர்களின் தகுதிகளை உணர்ந்து சுயசிந்தனையுடன் ஓட்டுப்போடுவதே வாக்களிப்பதாகும். இந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார். அந்த வேட்பாளர் எத்தனை பணம் கொடுத்தார் என எண்ணி வாக்களிக்காதீர்கள்.

நாம் நமது எதிர்காலத்தை எந்த வேட்பாளரின் கையில் ஒப்படைக்கப்போகிறோம் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும். ஒரு சிறிய தொகைக்காக தன்மானத்தையும், எதிர்காலத்தையும் விற்றுவிடாதீர்கள். ஜனநாயகம் தழைக்க சிந்தித்து மனசாட்சிப்படி வாக்களிப்போம். எந்த சூழ்நிலையிலும் வாக்கினை விற்கமாட்டோம் என்று உறுதி ஏற்போம்.இவ்வாறு கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: