நேருக்கு நேர் மோதிய ஆர்யா – விஷாலால் பரபரப்பு!…

விளம்பரங்கள்

ஐதராபாத்:-விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படமும், ஆர்யா நடித்த ராஜா ராணி திரைப்படமும், தெலுங்கில் டப் செய்யப்பட்டு இரண்டு படங்களும் நேற்று ஆந்திரா முழுவதிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு தமிழ் நடிகர்களின் தெலுங்கு டப்பிங் ரிலீஸ் ஆனதால் இவர்களுடைய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று ரிலீஸ் ஆன இரண்டு படங்களுமே நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழில் தோல்வியடைந்த பட்டத்து யானை தெலுங்கில் ஹிட் ஆகிவருவது ஆச்சர்யமான விஷயம்தான்.

ராஜா ராணி தமிழில் நல்ல வசூல் செய்தது. அதுபோலவே தெலுங்கிலு நல்ல வசூல் தந்து கொண்டிருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடிய ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: