செய்திகள்,திரையுலகம் ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…

ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!…

ஜெயம் ரவி,நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயர் ‘தனி ஒருவன்’!… post thumbnail image
சென்னை:-ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படம் தனி ஒருவன்.இதில் ஹீரோ ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஹரீஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், ‘வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு தான் உருவாக்கிய கதை என்றும் இது ரீமேக் படம் அல்ல எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், ஹைதராபாத், பெங்களூர், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறினார்.

தனி ஒருவன் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் ராஜாவின் சந்தோஷ் சுப்பிரமணியம், உனக்கும் எனக்கும் படங்களில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி