செய்திகள்,திரையுலகம் அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…

அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!…

அமீரின் அடுத்த படத்தில் கவர்ச்சியில் கலக்க விரும்பும் நடிகை!… post thumbnail image
சென்னை:-ஆதிபகவன் படத்தை அடுத்து அமீர் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் அமீர் தயாரிக்கும் ஒரு படத்தை சேரனிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் என்ற புதுமுக இயக்குனர் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை அமீர் தயாரிப்பதோடு, தமிழில் மட்டும் நடிக்கிறார். தெலுங்கில் நடிக்க ராம்சரண் தேஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.பாலாவின் கரகாட்டக்காரன் படத்தில் போட்டோஷூட் மட்டும் நடத்திவிட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சியில் இருந்த ஸ்ரேயாவுக்கு இந்த படம் புது தெம்பை கொடுத்துள்ளது.

இந்த படத்தில் ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சிக்கடலில் குதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நீச்சலுடை, படுக்கையறை காட்சிகள் எல்லாம் படத்தில் உண்டாம். ஸ்ரேயா அந்த காட்சிகளில் எல்லாம் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுதான் கையெழுத்து போட்டிருக்கின்றார். இந்த படம் ஸ்ரேயாவிற்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி