கமல் நடிக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தின் கதை!…

விளம்பரங்கள்

சென்னை:-சினிமா வட்டத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு உத்தமவில்லன் திரைப்படத்தை பற்றி தான்.முதலில் ஃபஸ்ட் லுக் வெளிவந்தது, அதுக்கு பிறகுதான் ஆரம்பமானது பிரச்சனையே ‘தெய்யம்’ என்ற கலையின் புகைப்படத்தை பிரஞ்சு புகைப்படக்காரரிடம் இருந்து காப்பியடித்தது என்று பரவலாக பேசப்பட்டதுக்கு தக்க விளக்கம் அளித்திருந்தார் கமல்.தற்போது இப்படத்தின் கதையும் கசிந்திருக்கிறது, இதில் வெளிவந்துள்ள தகவல்கள் பின் வருமாறு :

உத்தமன் , மனோரஞ்சன் என்ற இரு வேடத்தல் நடிக்கிறார் கமலஹாசன் இதில் 8ஆம் நூற்றாண்டின் நாடக நடிகராக உத்தமன். இன்னொரு வேடத்தில் 21 ஆம் நூற்றாண்டின் சூப்பர் ஸ்டாராக மனோரஞ்சனாக நடித்துள்ளாராம் கமல்.
இதில் மனோரஞ்சனின் ஆசானாக பிரபல இயக்குனர் கே. பாலசந்தரும், மனைவியாக ஊர்வசியும், ஊர்வசியின் அப்பாவாக இயக்குனர் கே விஸ்வநாத் நடிக்கிறார் மேலும் ஆண்ட்ரிய மனோரஞ்சன் மீது காதல் கொள்ளும் ஒருத்தியாக நடித்துள்ளார்.

மேலும் 21ஆம் நூற்றாண்டில் உத்தமனுக்கு மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாக விஸ்வரூபத்தில் நடித்த பூஜா குமார் நடிக்க, படத்திலும் இயக்குனராகவே நாசர் நடிக்ககிறார், ஜெயராம் ஜேக்கப் ஜக்கரியாவாக என்ற கதாபத்திரத்தில் நடிக்க அவரது வளர்ப்பு மகளாக பார்வதி மேனன் நடிக்கிறார்.ஜிப்ரான் இசையில், கதை, திரைக்கதை கமலஹாசன் எழுத்தில் இப்படத்தை இயக்குகிறார் ரமேஷ் அரவிந்த்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: