செய்திகள்,திரையுலகம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த அஜித்!…

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த அஜித்!…

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த அஜித்!… post thumbnail image
சென்னை:-அஜித் கடந்த சில படங்களில் நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்து வந்தார். இயல்பாக தன் உருவத்தை வெளியே கொண்டு வருகிறார் என்று ஒருசிலர் அவரை புகழ்ந்தாலும், ஹீரோயினுடன் டூயட் பாடும்போது நரைத்த தலையோடு இருப்பதை பல அஜீத் ரசிகர்கள் விரும்பவில்லை.

இந்த அதிருப்தியை பல ரசிகர்கள் வீரம் படம் பார்த்துவிட்டு சமுக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்தனர். தமன்னாவோடு டூயட் பாடும்போது அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் மேக்கப் விகாரமாக இருப்பதாக கூறப்பட்டது.இதனால் அடுத்து அஜீத் நடிக்கவிருக்கும் கெளதம் மேனன் படத்தில் கருத்த முடியுடன் உடம்பை ஸ்லிம் ஆக்கி இளைஞர் தோற்றத்துடன் தோன்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அஜித் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைக்கவும் முடிவு செய்தார். ஆனால் தற்போது வந்த தகவலின்படி கெளதம் மேனன் படத்திலும் அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலேயே நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால், அஜீத் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி