செய்திகள்,திரையுலகம் அஜித்திடம் தோற்ற இயக்குனர்!…

அஜித்திடம் தோற்ற இயக்குனர்!…

அஜித்திடம் தோற்ற இயக்குனர்!… post thumbnail image
சென்னை:-மங்காத்தா தொடங்கிய சல்ட் அண்ட் பெப்பர் லுக் வீரம் வரைக்கும் ஹிட் லிஸ்ட்டில்தான் இருக்கின்றன. அஜீத்தின் ரசிகர்களும் அதனை கொண்டாடியே வந்தனர். தற்போது அஜித் கௌதம் மேனன் படத்தில் நடிக்கப்போவது தெரிந்த செய்திதான்.

இந்த படத்தில் தான் அஜித்தை மீண்டும் அந்த இளமை தோற்றத்தில் காட்ட ஆசைப்பட்டாராம் கௌதம் மேனன்.இதற்காக வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் எத்தனையோ ஹேர் டைகளை வரவழைத்து அதை தலயின் தலையின் அடித்து கருமை ஆக்க முயற்சி செய்திருக்கிறார் ஆனால் இரண்டு நாட்கள் எதிர்பார்த்ததுபோல் இருக்கும் தல மூன்றாவது நாள் வெளுத்துவிடுகிறதாம்.

இதனால் தன் முயற்சி அனைத்தும் வீணாக போனதை உணர்ந்த கௌதம் இந்த படத்திலும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே அஜித்தை காட்டவிருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி