ஜி.வி.பிரகாஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்!…

விளம்பரங்கள்

சென்னை:-வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், அதன் பின்னர் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தார். மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய ஜி.வி.பிரகாஷ், அடுத்த அவதாரமாக பென்சில் படத்தின் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார்.

பென்சில் படத்தில் பள்ளி மாணவனாக நடிப்பதற்காக ஒன்பது கிலோ எடையை குறைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவர் ஆர்யா, கார்த்தி, ஜெயம் ரவிக்கு போட்டியாக இருப்பதாக அவரது நண்பர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் ஜி.வி. பிரகாஷை சந்தித்த இளைய தளபதி விஜய், ‘ஒரு ஹீரோவுக்குரிய அனைத்து அம்சங்களையும் ஜி.வி. பிரகாஷிடம் தற்போது பார்க்கிறேன். அவர் ஹீரோவாகவும் வெற்றியடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறிய போது ‘விஜய் கூறிய வார்த்தைகளே எனக்கு தேசிய விருது வாங்கியதற்கு சமம். இந்த இன்ப அதிர்ச்சியை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: