அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…

மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!…

மோடி, ராகுல், கெஜ்ரிவால் மீது பந்தயம்: ரூ.60,000 கோடி சூதாட்டம்!… post thumbnail image
மும்பை:-நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் கணிப்புகள் வரிசையாக வெளியாகி வருகின்றன. பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்றும், காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களை பெறும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன. திடீரென மோடி செல்வாக்கு சரிந்து வருவதாகவும் ஒரு கணிப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், கிரிக்கெட் சூதாட்டம் போல் தேர்தல் சூதாட்டம் தொடங்கியிருக்கிறது.

இதில் பந்தயம் கட்டுவோருக்கு லாபமோ, இல்லையோ சூதாட்டக்காரர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கிறது. மும்பையை மையமாக கொண்டு செயல்படும் ஏராளமான சூதாட்ட தரகர்கள் (புக்கிகள்) இந்த கருத்து கணிப்புகளை வைத்து சூதாட்டத்தில் குதித்துள்ளனர். இதற்காக ரகசிய விடுதிகள், கிளப்புகள், பீர் பார்லர்கள் உள்ளிட்ட இடங்களில் புக்கிகளின் சூதாட்டம் களைகட்ட தொடங்கி இருக்கிறது. பாஜ 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ரூ.100 கட்டுபவர்களுக்கு, அதே போல் நடக்கும் பட்சத்தில் ரூ.122 அளிக்கப்படும்.

210 தொகுதிகளில் வெற்றி பெறும் என பந்தயம் கட்டினால் ரூ.157 வழங்கப்படும். 225 இடங்களில் பாஜ வெற்றி பெறும் என பந்தயம் கட்டினால் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.180 அளிக்கப்படும். காங்கிரஸ் 70 இடங்களில் வெற்றி பெறும் என கட்டினால் ரூ.124, 75 இடங்கள் என்றால் ரூ.158, 85 இடங்கள் என்றால் ரூ.260 வழங்கப்படும். இப்படி புக்கிகள் சூதாட்ட ரேட் நிர்ணயம் செய்துள்ளனர். இதே போல் ஆம் ஆத்மி கட்சி மீதும் பெட்டிங் வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சி 6 இடங்களில் வென்றால் ரூ.134, 8 இடங்கள் வென்றால் ரூ.215, 9 இடங்களில் வென்றால் ரூ.290, 10 இடங்களில் வென்றால் ரூ.375 வழங்கப்படும்.

மோடி பிரதமர் ஆவார் என பந்தயம் கட்டுபவர்களுக்கு ரூ.142, ராகுலுக்கு ரூ.750, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கட்டினால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று புக்கிகள் தெரிவித்துள்ளனர். மும்பையை தவிர்த்து துபாய், கராச்சி, லண்டன் ஆகிய நகரங்களும் சூதாட்ட மையங்களாக செயல்படுகின்றன. இந்த தேர்தலில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி வரை புரண்டதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி