செய்திகள்,திரையுலகம் வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…

வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்…

வடிவேலுவின் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ படம் – முன்னோட்டம்… post thumbnail image
சென்னை:-ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’.வரலாற்றுக் காலப் பின்னணியில், நகைச்சுவை கலந்து மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படம் இது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தெனாலிராமன், மன்னர் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார். மனோபாலா, ராதாரவி, சண்முகராஜன், ஜோ மல்லூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.கலை இயக்குனர் எம். பிரபாகரன் கைவண்ணத்தில் இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச் சுவர், நகரம் என அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன.வெளிப்புறப் படப்பிடிப்புகள் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இமான் இசையில் புலமைப்பித்தன், விவேகா பாடல்களை எழுதியுள்ளனர். வடிவேலுவும் இப்படத்தில் பாடியுள்ளார். விரைவில் இசை வெளியீடு நடைபெற உள்ளது. தற்போது படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
பழம் பெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் சிரிக்கவும், சிந்திக்கவும், இப்படத்திற்காக அருமையான வசனங்களை எழுதியுள்ளார்.ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகம்மது படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி