செய்திகள்,திரையுலகம் சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…

சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!…

சிம்பு-தனுஷ் இணைந்து நடிக்க விஜய் அறிவுரை!… post thumbnail image
சென்னை:-சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவர்களின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டாலும், இருவரும் நல்ல நண்பர்களாகவே இதுவரை இருந்து வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் இருவரும் நைட் பார்ட்டிகளுக்கு போவது, வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வது என இருவரும் ஒன்றாக ஜாலியாக சுற்றுவதுமாக இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சிம்பு, தனுஷ் இருவரும் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய். அந்த நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய், சிம்பு-தனுஷ் இருவரிடமும் மனம்விட்டு நீண்டநேரம் பேசினார்.

அப்போது இருவரும் இணைந்து ஒரு படமாவது நடிக்க விஜய் அறிவுரை கூறியிருக்கின்றார். அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. பெரிய ஸ்டார்கள் இருவர் சேர்ந்து ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் அது ஒரு மலரும் நினைவாக பின்னாளில் இருக்கும் என்று கூறிய விஜய், தான் சூர்யா மற்றும் அஜீத்துடன் சேர்ந்து நடித்த படங்களை நினைவுபடுத்தியுள்ளார்.விஜய்யின் அறிவுரையை ஏற்று கூடியவிரைவில் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்கும் அறிவிப்பு கோலிவுட் எதிர்பார்க்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி