பின்வாங்கிய ரஜினி!… பின்வாங்க மறுக்கும் விஷால்!…

விளம்பரங்கள்

சென்னை:-கோச்சடையான் படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம், EROS அறிவித்து இருந்தாலும், சமீபத்தில் பேட்டியளித்த செளந்தர்யா, அதனை உறுதி செய்யவில்லை.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி என அறிவித்து உள்ளதால், கோச்சடையான் பட ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்வதாக அறிவித்திருந்த விஷால், தன்னுடைய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ரிலீஸ் செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்காக படத்தின் ரிலீஸை தள்ளி வைக்குமாறு ரஜினி பின்வாங்கினாலும், தான் பின்வாங்கப்போவதில்லை என்றும், தன்னுடைய படத்தின் ஸ்கிரிப்ட் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் அதனால் தேர்தலுக்கு பயந்து ரிலீஸ் தேதியை மாற்ற முடியாது என்றும் விஷால் கூறியதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: