செய்திகள்,திரையுலகம் வீரன் முத்துராக்கு (2014) திரை விமர்சனம்…

வீரன் முத்துராக்கு (2014) திரை விமர்சனம்…

வீரன் முத்துராக்கு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான நாயகன் கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் இவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் நாயகன், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா ஸ்ரீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் நாயகியும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார். லியாஸ்ரீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என போலீஸ் அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

நாயகிக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத நாயகி, நாயகனைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று நாயகியை கொன்று விடுகிறார்.
சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை நாயகன் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.நாயகன் கதிர் சண்டைக் காட்சிகளிலும், தந்தையையும், காதலியையும் பறிகொடுத்து சோகத்தை காட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகி லியாஸ்ரீக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும், குறைவான காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.நரேனும், சண்முக சுந்தரமும் ஊர் தலைவர்களாக பளிச்சிடுகிறார்கள். நரேன் நடிப்பில் சிகரம் தொடுகிறார். சண்முக சுந்தரம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நரேனின் தம்பியாக வரும் நமோ நாராயணனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இரண்டு தலைமுறை கதைகளை படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர், வன்முறையை ரொம்பவும் கொடுமையாக காட்டாமல் திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றைய தலைமுறைகளை இந்த படம் திருப்திபடுத்துமா? என்பது சந்தேகமே.கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜி.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை.

மொத்தத்தில் ‘வீரன் முத்துராக்கு’ பழிக்குபழி….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி