செய்திகள்,திரையுலகம் நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…

நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…

நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்… post thumbnail image
மிகவும் நேர்மையான ஒழுக்கமான கல்வியை கற்று வெளியே வரும் ஜெயம் ரவிக்கு தான் படித்த கல்விக்கு நேர்மாறாக மக்கள் நடந்து கொள்வது தெரிய வர, அநியாயத்தை கண்டு பொங்கி எழுகிறார். ஏற்கனவே சாமுராய், இந்தியன், அந்நியன் மற்றும் முதல்வன் படத்தில் சொன்னதை கொஞ்சம் சமுத்திரக்கனி தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கும் கதைதான் நிமிர்ந்து நில்.

எல்லாவித டாக்குமெண்ட்கள் இருந்து கட்டாயப்படுத்தி லஞ்சம் கேட்கும் டிராபிக் போலீஸாரிடம் சிக்கும், ஜெயம் ரவி, லஞ்சம் கொடுக்க மறுக்கவே, அங்கிருந்து அவருக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. நீதிமன்றத்திற்கு சென்று தான் நிரபராதி என்றும் நிரூபித்து அரசு அதிகாரிகளின் லஞ்சத்தனத்தை நிரூபிக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் இவரை அடித்து உதைக்கின்றனர். லஞ்சவாதிகளுக்கு பாடம் புகட்ட நினைக்கும் ஜெயம் ரவி, தெஹல்கா பத்திரிகை போன்று வீடியோ ஆதாரத்துடன் பல லஞ்சப்புகார்களை படம்பிடித்து அந்த வீடியோவை நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்புகிறார். இவருக்கு மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆதரவு தருகிறார்கள். அதன்பிறகு பாதிக்கப்பட்ட லஞ்ச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.

சாட்டை படத்தின் மூலம் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டிய சமுத்திரக்கனி, இம்முறை கையில் எடுத்திருப்பது லஞ்சம் என்ற கொடிய அரக்கன். படத்தின் பிளஸ் பாயிண்ட் அவருடைய வசனங்கள் மட்டுமே. பல காட்சிகள் ஏற்கனவே வந்த படங்களில் பார்த்த ஞாபகம் வருகிறது. இந்த மேட்டரை ஷங்கர் இந்தியன், அந்நியன், முதல்வன் ஆகிய மூன்று படங்களிலும் விரிவாக சொல்லிவிட்டதால் மேற்கொண்டு எதை வித்தியாசமாக சொல்வது என்று சமுத்திரக்கனி திணறியிருப்பது இரண்டாவது பாதி திரைக்கதையில் தெரிகிறது.ஜெயம் ரவி ஆக்ரோஷமான வேடத்தில் மீண்டும் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அசத்தும் ஜெயம் ரவி, இரண்டாவது பாதியில் வரும் இரண்டாவது கேரக்டரில் சறுக்கி விழுகிறார். இரண்டாவது பாதி, தெலுங்கு படம் பார்ப்பது போல் இருக்கிறது.

இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையே இல்லை. தமிழ்சினிமா மரபுப்படி டூயட் பாடல்களுக்கு ஒரு ஹீரோயின் தேவை. அந்த தேவையை அமலாபால் பூர்த்தி செய்திருக்கிறார்.முதன்முதலாக சூரிக்கு கருப்பு தங்கம் என்ற பட்டம் கொடுத்திருக்கின்றார்கள். இவர் வரும் காட்சிகள் அனைத்தும் கலகல.குறைந்த நேரமே வந்தாலும், நீயா நானா கோபிநாத் மற்றும் சரத்குமார் கேரக்டர்கள் மனதில் நிற்கிறது. பேசாமல் கோபிநாத் குணசித்திர நடிகராக மாறிவிடலாம். அசால்ட்டான, அற்புதமான நடிப்பு.
மிகச்சிறந்த படமாக வந்திருக்கவேண்டியது. சொதப்பலான இரண்டாவதி பாதியால் சராசரி படமாக மாறியுள்ளது.
மொத்தத்தில் ‘நிமிர்ந்து நில்’ www.imdb.eniyatamil.com
நிமிர்ந்த மனிதனின் வாழ்க்கை….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி