பாகிஸ்தானில் ஆம் ஆத்மி பெயரில் புதிய கட்சி துவக்கம்!…

விளம்பரங்கள்

லாகூர்:-அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் பிரவேசம் இந்திய அரசியல் வரலாற்றில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியினை போன்றே பாகிஸ்தானிலும் ஒரு கட்சி தொடங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் குன்ஜன்வாலா பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அர்ஸ்லன்-உல்-முல்க் தனது கட்சியின் பெயராக ஆம் ஆத்மியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அர்ஸ்லன் கூறுகையில் “பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னாவின் கனவினை பூர்த்தி செய்வதே எங்கள் கட்சியின் நோக்கம். நீதியை நிலைநிறுத்துவதற்கு உண்ணாவிரத போராட்டம் மட்டுமே வழியாக அமையும்” என்றும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: