பல்கலைக்கழக விழாவுக்கு போதையில் வந்தாரா முன்னணி நடிகை?…

விளம்பரங்கள்

சென்னை:-சென்னை அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த நட்சத்திர கலைவிழா ஒன்றில் பாலா படத்தில் நடித்த ஒரு முக்கிய நடிகை கலந்து கொண்டதாகவும், அங்கு அவர் போதையில் தத்தளித்ததாகவும் ஃபேஸ்புக்கில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர்தான் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். இதனால் சம்மந்தப்பட்ட அந்த நடிகை கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

அந்த விழாவில் நான் கலந்துகொள்ளவே இல்லை. அப்படியிருக்கும்போது நான் கலந்து கொண்டதாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவருவது என்னை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது என்றும், இதுபோன்ற வதந்தியை யாரும் நம்பவேண்டும் என்றும் அவர் தனது டுவிட்டரில் இன்று தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்த பல்கலைக்கழகத்தின் விழா அமைப்பாளர்களிடம் விசாரித்த போது, அந்த நடிகை விழாவுக்கு வருவதாக இருந்தது என்றும், ஆனால் அவர் கடைசி வரை வரவில்லை என்றும், அவரை எதிர்பார்த்து ஏமாந்த ஒரு சிலர் இவ்வாறு தவறான செய்திகளை பரப்பி உள்ளனர் என்றும் கூறினர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: