செய்திகள்,திரையுலகம் தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்!…

தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்!…

தேர்தலை கண்டு நடுங்கும் நடிகர்-நடிகைகள்!… post thumbnail image
மும்பை:-தேர்தலுக்கும், சினிமா உலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாக்காளர்களை கவர்வதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகள் சினிமா பிரபலங்களை பயன்படுத்துகின்றன. அரசியல் தலைவர்கள், தங்கள் பிரசார கூட்டங்களில் மக்கள் கூட்டத்தை சேர்ப்பதற்காக பெருந்தொகை கொடுத்து நடிகர்&நடிகைகளை அழைத்து வருகின்றனர்.சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையே தங்கள் கட்சியின் வேட்பாளர்களாக அறிவித்து வாக்குகளை அள்ளுகின்றன.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நடிகர் தேவ், நடிகைகள் மூன்மூன் சென், சந்தியா ராய் உள்ளிட்டோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பிலும், நடிகர் ஜார்ஜ் பேக்கர் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பிலும் போட்டியிடுகின்றனர்.தேர்தலை கருத்தில் கொண்டு பிரபல ஒடியா நடிகர்கள் சத்யாகி மிஸ்ரா, மிகிர் தாஸ் மற்றும் பின்னணி பாடகர் திருப்பதி தாஸ் ஆகியோர் பிஜூ ஜனதாதளம் கட்சியில் இணைந்தனர். இதைப்போல மேலும் சில சினிமா நட்சத்திரங்களை ஈர்ப்பதில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இவர்களுக்கு மத்தியில், அரசியல் என்றாலே காத தூரம் ஓடும் சினிமா பிரபலங்களும் உள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் செய்யலாமே? அரசியல் எதற்கு? என கேட்கும் சினிமா பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர் இந்தி நடிகர் அமீர்கான். சிறந்த சமூக சேவகரான இவர், அரசியல் குறித்து கூறும்போது,நான் அரசியலை வெறுக்கவில்லை. ஆனால் அரசியலிலும், மக்களின் இதயங்களை தொடுவதிலும் எனக்கு விருப்பமில்லை. சிறந்த சமூக சேவை செய்வதற்கு அரசியலில்தான் இருக்க வேண்டும் என்றில்லை. நான் எங்கே இருந்தாலும் சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை என்னால் அளிக்க இயலும். இதுவே நான் அரசியலில் ஈடுபடாததற்கு காரணம் என்றார்.

இதைப்போல மற்றொரு பாலிவுட் நடிகரான அனில் கபூர் கூறுகையில், நான் அரசியல்வாதி இல்லை. அதைப்போல எந்த கட்சியை சார்ந்தவனும் இல்லை. தேர்தலில் போட்டியிடுமாறு என்னை எந்த கட்சியும் அணுகவில்லை. அப்படி அணுகினாலும் நான் போட்டியிடமாட்டேன் என்று தெரிவித்தார்.பாலிவுட்டின் முன்னாள் கனவுக்கன்னியான மாதுரி தீட்சித் குறிப்பிடும் போது, அரசியலில் குதிப்பது பற்றி நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை. ஓட்டு போடுவது ரகசியமானது. அதைப்போல என்னுடைய எண்ணங்களும் ரகசியமானவைÕ என்று கூறினார்.இந்தி திரையுலகின் பிரபல திரைக்கதை எழுத்தாளரான சலிம் கான் கூறும்போது, நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அதைப்போல எந்த கட்சியும் என்னை அணுகவில்லை. ஆனால் எந்த கட்சியிலும் சேர்வதற்கான நோக்கமோ, காரணமோ என்னிடம் இல்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி