செய்திகள்,திரையுலகம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வேங்கைசாமி’!…

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வேங்கைசாமி’!…

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வேங்கைசாமி’!… post thumbnail image
சென்னை:-ஆடுகளம் படத்திற்கு பிறகு கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள் விருது பெற்ற நாயகர்கள்.இவர்களது அடுத்த படம் எப்போது என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இன்று தனது வேங்கைசாமி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வெற்றிமாறன்.

இந்த படம் வட சென்னையை மையமாக கொண்ட படம் என்பதால், இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

எனினும் எந்த வித அறிவிப்பும் படக்குழுவினரிடம் இருந்து சரியாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் பெரும் பகுதியை காடுகளில் எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.ஆடுகளத்தைப் போல வெற்றிமாறனின் இந்த காடுகளமும் தேசிய விருதுவரை செல்லும் என நம்பலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி