செய்திகள்,திரையுலகம் கவுதம் மேனன் இயக்கம் அஜீத் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் சன்னிலியோன்!…

கவுதம் மேனன் இயக்கம் அஜீத் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் சன்னிலியோன்!…

கவுதம் மேனன் இயக்கம் அஜீத் படத்தில் தீபிகா படுகோனே மற்றும் சன்னிலியோன்!… post thumbnail image
சென்னை:-பாலிவுட்டில் மிகவும் பிரபலமான திரைக்கதை ஆசிரியர் ஸ்ரீதர் ராகவன். இவர் Dum Maaro Dum, Khakee மற்றும் Bluffmaster போன்ற வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி கொடுத்துள்ளார். தற்போது இவர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை கவுதம் மேனன் உடன் இணைந்து எழுத உள்ளதாகவும், கவுதம் மேனனுடன் பணிபுரிவதில் அதிக மகிழ்ச்சி என்றும், ஸ்ரீதர் ராகவன் தன்னுடைய டுவிட்டரில் நேற்று தெரிவித்துள்ளார். இவர் பணிபுரியும் முதல் தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீதர் ராகவனின் ஆலோசனைப்படி இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி போன்ற ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சன்னிலியோனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில் தீபிகா படுகோனே, மற்றும் சன்னிலியோன் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி